செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இப்போதைய நிலையைப் புரிந்து கொண்டு வரும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
. அதிமுக ஆட்சியில் கொரோனா போன்ற இக்கட்டான காலத்திலும் நிதி நெருக்கடி இல்லாமல் மக்களைக் காப்பாற்றியதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தற்போதைய திமுக ஆட்சியில் தமிழக மக்கள் அனைவருமே கடன்காரர்களாக மாற்றப்பட்டு விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதன் மூலம், அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் முதன்மை இடத்திற்கு தமிழகத்தை திமுக தள்ளிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.
