2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அங்கம் வகித்து வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் தற்போது 2026 தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினர்.

இந்நிலையில், ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சியில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும், பொங்கலுக்குள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.