உயிரினங்களில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் முதலையின் பிடியில் இருந்து ஆடு ஒன்று தனது புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகே தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை முதலைகள் வேட்டையாடுவது வழக்கம் என்றாலும், இந்த ஆடு காட்டிய துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
भौतिकी और गुरुत्वाकर्षण भी हैरान रह गए! 💀
मौत के मुंह से निकलने के लिए इस बकरी ने जो कर दिखाया, उसे देखकर आपकी आंखें फटी की फटी रह जाएंगी
यकीन मानिए, ऐसा नज़ारा आपने पहले कभी नहीं देखा होगा… pic.twitter.com/MNRADa0MGy
— Abhishek Pal (@Abhishek_Pal94) December 26, 2025
அந்த வீடியோவில் முதலை தன்னைத் தாக்க முற்படும்போது, ஆடு சற்றும் பதற்றமடையாமல் முதலையின் முகத்திலேயே தனது காலை வைத்து முட்டுக்கொடுத்து மெல்ல மெல்லப் பாறையின் மேல் பகுதிக்கு ஏறிச் செல்கிறது. பின்னர் சரியான தருணத்தில் அங்கிருந்து லாவகமாகக் குதித்து உயிர் தப்புகிறது.
ஆபத்து வரும்போது பதற்றப்படாமல் பொறுமையுடனும் தைரியத்துடனும் செயல்பட்டால் மரணத்தையும் வெல்லலாம் என்ற பாடத்தை இந்த நிகழ்வு மனிதர்களுக்கு உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளதோடு, இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
