விருதுநகர் அருகே முட்டை லோடு ஏற்றிச் சென்ற மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு 60 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி நேற்று புறப்பட்டது. லாரியை நாமக்கலைச் சேர்ந்த சுதாகர் (30) ஓட்டிச் சென்றார். விருதுநகர் ஆர்.ஆர். நகர் அருகே நான்கு வழிச்சாலையில் மதியம் 3.30 மணியளவில் சென்றபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.
View this post on Instagram
இந்த விபத்தில் லாரியில் இருந்த முட்டைகள் சாலையில் சிதறியதுடன், உடைந்த முட்டைகளின் நீர் சாலையில் வழிந்தோடியதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
