சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த லாரி கிளீனர் லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படும் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும், திருப்பூரில் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.