சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த திமுக 63-வது வட்டச்செயலாளர் பிரபாகரன் என்பவர், சம்பந்தப்பட்ட இளைஞரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், பொதுமக்கள் மீது திமுகவினர் நடத்தும் இத்தகைய தாக்குதல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள், முதல்வர் திரு. @mkstalin அவர்களே!
சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து “தீர்க்க வந்த” சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக்… pic.twitter.com/leDRm95DPp
— Nainar Nagenthran (@NainarBJP) December 27, 2025
“>
அதிகாரத் திமிருடன் பொதுமக்களை வசைபாடும் நபர்களை வளர்த்துவிடுவதுதான் திராவிட மாடலா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட கார் உரிமையாளர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
