புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகிய பொருட்கள் இடம்பெறும். அரசின் இந்த அறிவிப்பு குடும்பங்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், பொங்கலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச ஆடைகளுக்குப் பதிலாக, இந்த முறை பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாகப் பணம் செலுத்தப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை வரவு வைக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
