சிறுவன் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் என அறியப்படும் அபினவ் அரோரா, கிறிஸ்துமஸ் பண்டிகை குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடாதீர்கள், உங்கள் குழந்தைகளை சாண்டா கிளாஸ் போல அலங்கரிக்காதீர்கள்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மத நல்லிணக்கத்திற்கு எதிராக அவர் வெறுப்பை உமிழும் விதமாகப் பேசியுள்ளதாகப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
"Say no to Christmas." ❌🎄❌
"Don't make your kids Santa Claus." 🎅
Hindu religious orator Abhinav Arora openly spewed hatred against Christmas.
Ironically, he himself behaves like a joker while calling Santa Claus a joker. Pure hypocrisy. pic.twitter.com/cQUiu04l9d
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 25, 2025
அபினவ் அரோராவின் இந்தப் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர். சாண்டா கிளாஸை ஒரு ‘ஜோக்கர்’ என்று அவர் விமர்சித்தாலும், உண்மையில் அவருடைய செயல்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் தான் கோமாளித்தனமாக இருப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர். பிற மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் அதே வேளையில், அவர் செய்யும் அதே போன்ற செயல்களை மக்கள் ‘சுயநலம் மற்றும் போலித்தனம்’ (Hypocrisy) என்று சாடி வருகின்றனர்.
