மும்பை என்றாலே ஆச்சரியங்களுக்குப் பஞ்சம் இருக்காது. கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் மும்பையில், லோக்கல் ட்ரெயின் முதல் ஆட்டோ வரை ஒவ்வொரு பயணமும் ஒரு கதையைச் சொல்லும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, வழக்கமான மும்பை டிராஃபிக்கிற்கு இடையே ஒரு கலகலப்பான காட்சியைப் படம்பிடித்துள்ளது. அதில் ஒரு நாய் ஆட்டோ ரிக்ஷாவின் மேற்கூரையில் (Roof) மிகவும் கெத்தாக அமர்ந்து பயணம் செய்கிறது.
मुंबई में सफर सबका अलग होता है,
कोई अंदर बैठता है, कोई छत पर VIP मूड में।Dogesh Bhai ko Ab halke mai mat lena 😊😂 pic.twitter.com/BBzOLvppDF— Aalia Nadim (@aalianadim) December 24, 2025
இந்த வீடியோவில், பரபரப்பான மும்பை சாலையில் ஆட்டோ ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்க, அதன் மேலே ஒரு நாய் எந்தவித பயமும் இல்லாமல், மிக சகஜமாக அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வருகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் ஆச்சரியமடைந்து, தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நெட்டிசன்கள் இந்த நாய்க்கு அன்போடு ‘டோகேஷ் பாய்’ என்று பெயரிட்டு, “மும்பைல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்” என இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
