மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான விநாயகன், ‘ஆடு 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து, தற்போது சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது, அவர் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்தார். தொடர் உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனையில், கழுத்தின் நரம்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
Vinayakan met with an accident during Aadu 3 shooting. Get well soon#Aadu3 pic.twitter.com/mxHELlWA3V
— Btwits_Akash (@btwits_Akash_) December 24, 2025
“>
இது குறித்து அவர் கூறுகையில், “கழுத்து நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதை இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் உணர்ந்தேன்; சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டார். தற்போது வீடு திரும்பியுள்ள அவருக்கு 6 வாரங்கள் முழு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 2026 மார்ச் 19 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
