மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் ஒரு கும்பல், “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டபடி தேவாலயத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதோடு, தேவாலயத்தின் மீது கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேவாலயத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது.
Location: Jabalpur, Madhya Pradesh
A church was attacked in a planned manner.
Members of a Hindu organization, chanting "Jai Shri Ram," entered the church, vandalized it, and threw stones. They accused the church of engaging in religious conversions. pic.twitter.com/B9V8YVgeq4
— The Muslim (@TheMuslim786) December 23, 2025
இந்தக் கும்பல் தேவாலயத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது காணொளியாக வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகிப் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
