உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயும் அவரது மகளும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு புலந்த்சாஹர் நீதிமன்றம் தற்போது அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க இத்தனை ஆண்டுகள் ஆனாலும், நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
UP NEWS – Bulandshahr Court awards life imprisonment to 5 men convicted in rape of a mother and her daughter on national highway 9 years ago. pic.twitter.com/hHzvRCgmHC
— News Arena India (@NewsArenaIndia) December 22, 2025
நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்போது பெரும் அரசியல் விவாதங்களையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது குற்றவாளிகள் ஐவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளனர்.
