லாரி ஓட்டுநர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் செல்லப் பிராணிகளையும் பிரிந்து வாடுவது வழக்கம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர் தனது வளர்ப்பு நாய்களைப் பிரிய மனமில்லாமல், அவற்றுக்காக லாரியிலேயே பிரத்யேகக் கூண்டுகளை அமைத்துத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
This driver created nests for his pets to travel with him. pic.twitter.com/TDsDZoveyo
— The Best (@Thebestfigen) December 23, 2025
லாரியின் அடிப்பகுதியில் ஒரு கூண்டு வலையாலும், மற்றொரு கூண்டு கண்ணாடி அல்லது ஃபைபர் பொருளால் காற்று புகும் வசதியுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தனது செல்லப் பிராணிகள் மீது அவர் காட்டியுள்ள இந்த அதீத அக்கறை மற்றும் புத்திசாலித்தனமான முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அன்பும் நம்பிக்கையுமே மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை அழகாக்குகிறது என்று பாராட்டி வரும் இணையவாசிகள், இந்த வீடியோவை லட்சக்கணக்கான முறை பகிர்ந்து வருகின்றனர்.
