அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக, இந்திய யூடியூபர் ஆனந்த் மிட்டல் சீன அதிகாரிகளால் சுமார் 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 16-ஆம் தேதி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள குடிவரவு அலுவலகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டார்.
View this post on Instagram
அப்போது அவரிடம் இருந்த மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சுமார் 15 மணி நேரமாக உணவோ தண்ணீரோ இன்றி அவர் வைக்கப்பட்டதாகத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம் குறித்த அவரது பழைய வீடியோ கருத்தே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று சீன அதிகாரிகள் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற நாட்டுப் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையிலும், தனக்கு மட்டும் உணவு மறுக்கப்பட்டதாகக் கூறும் ஆனந்த் மிட்டல், தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.
