சிங்கப்பூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ள சாதனை இணையதளங்களில் பலருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. கிரிஸ் என்ற அந்த இளம்பெண் தனது 14 வயது முதலே உழைக்கத் தொடங்கியதாகவும், தற்போது ஒரு முழுநேர உள்ளடக்க உருவாக்குநராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வரை ஓய்வின்றி உழைத்த அவர், வார இறுதி நாட்களிலும் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி இந்த நிலையை எட்டியுள்ளார். வங்கி கடன் ஏதுமின்றி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் முன்பணத்தைத் தனது சேமிப்பிலிருந்து ரொக்கமாகச் செலுத்தியுள்ள அவர், தனது சிக்கனமான வாழ்க்கை முறையே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
தனது 27 வயதிற்குள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற இலக்கை முன்கூட்டியே எட்டியுள்ள அவரது இந்தச் சாதனையைப் பாராட்டி வரும் இணையவாசிகள், இன்றைய தலைமுறைக்கு இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
