தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை, தற்போது ஒரு இந்து கடவுள் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 22-ம் தேதி, தாய்லாந்து ராணுவம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்த சுமார் 9 மீட்டர் உயரமுள்ள மகாவிஷ்ணுவின் சிலையை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.
A monument to a Hindu deity installed by Cambodia was torn down by Thailand’s army
Not a dismantling — more like a straight kick up the backside. Only instead of a foot, it was an excavator.
The irony is brutal. Both countries are Buddhist with deep Hindu roots. Hindus revere… pic.twitter.com/QzO0P5uWYx
— NEXTA (@nexta_tv) December 23, 2025
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, குறிப்பாக இந்திய இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலை உடைப்பு குறித்து தாய்லாந்து ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
தாய்லாந்திற்குச் சொந்தமான பகுதியில் கம்போடியா ராணுவம் கடந்த 2013-ல் அத்துமீறி இந்தச் சிலையை நிறுவியதாகவும், நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டவே இது அகற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது தங்களின் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே இந்த எல்லை மோதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தச் சிலை உடைப்பு சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போரை மூட்டிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
