நகரம் முழுவதும் அலைந்து திரிந்து பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு உதவும் வகையில், வினீத் என்ற நபர் தனது வீட்டின் முன்பாக குடிநீர் பாட்டில்களை வைத்து மேற்கொண்டு வரும் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டாண்டுகளாகக் கோடைக்காலத்தில் தாகத்துடன் வரும் விநியோகப் பிரதிநிதிகளுக்காகத் தனது வீட்டின் நுழைவாயிலில் குடிநீர் பாட்டில்களை வைப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

இதற்காக சுமார் 300 குடிநீர் பாட்டில்களை வாங்கி வைக்கும் அவரது இந்தச் செயலைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் இவரது இந்த முன்மாதிரியான முயற்சியைப் பாராட்டியுள்ளதுடன், தாங்களும் இதுபோன்று கோடையில் மோர் மற்றும் பானை தண்ணீர் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சக மனிதர்கள் மீது காட்டும் இந்தச் சிறிய அக்கறை இணையதளங்களில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.