டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இரு இளம் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த ஒரு பெட்டியில், திடீரென இரு பெண்களுக்குள் ஏற்பட்ட வாய்மொழித் தகராறு முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிக் கொண்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Srishti | Lifestyle Creator (@srishtiibhola)

அருகில் இருந்த மற்ற பயணிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், ஆவேசமடைந்த அந்தப் பெண்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பொது இடங்களில் இது போன்ற அநாகரிகமான செயல்கள் அதிகரிப்பது கவலையளிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மெட்ரோவில் இருக்கைக்காகவும், தள்ளுமுள்ளு காரணங்களாலும் இதுபோன்ற மோதல்கள் தொடர்கதையாகி வருவது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.