தெருவோரக் கடையில் விற்கப்படும் பிரியாணியில் ஒருவர் சாக்கடை நீரை எடுத்து ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளி சாக்கடைக்கு அருகில் பிரியாணி அண்டாவை வைத்திருக்கும் நபர், ஒரு கிண்ணத்தால் சாக்கடை நீரை மொண்டு அப்படியே பிரியாணிக்குள் ஊற்றி கலக்குகிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாகக் கூறி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தபோது இது உண்மையானது அல்ல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Surendra Kumar (@suredrakumae)

“>

வீடியோவில் உள்ள நபரின் கைகள் மற்றும் நீர் ஊற்றப்படும் விதம் இயற்கைக்கு மாறாக இருப்பதை நுணுக்கமாகப் பார்த்தால் கண்டறிய முடியும். மக்களைத் திசைதிருப்பவும், அச்சத்தை ஏற்படுத்தவும் இது போன்ற AI வீடியோக்கள் பரப்பப்படுவதால், சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைத் தீர விசாரிக்காமல் நம்ப வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.