ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தொடர்ச்சியாக 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) கடினமான பணி முடிந்து வீடு திரும்பியபோது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட உணர்ச்சிகரமான உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் கணவர் அமர்ந்திருக்க, அவரது மனைவி கண்ணீர் மல்கவும் ஆத்திரத்துடனும் தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். “வீட்டிற்கு வெறும் 16 மணிநேரம் மட்டும் ஒதுக்கிவிட்டு, 72 மணிநேரத்தை ரயில்வே துறைக்கு வழங்குகிறீர்கள்.

நாள் முழுவதும் வீட்டு வேலைகளை நான் ஒருவளாகவே சுமக்கிறேன்,” என அவர் ஆவேசமாகக் கேட்கும் காட்சிகள், இன்றைய காலக்கட்டத்தில் பணி மற்றும் குடும்ப வாழ்விற்கு இடையே உள்ள சமநிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

“>

 

இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.ஒரு தரப்பினர், ஒரு குடும்பத்தின் வசதியான வாழ்வாதாரத்திற்காக ஆண்கள் தங்களது ஓய்வு மற்றும் மனநலனைத் தியாகம் செய்து உழைக்க வேண்டிய சூழலைச் சுட்டிக்காட்டுகின்றனர். “குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வெளியே சென்று கடுமையாக உழைப்பவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்” என அவர்கள் வாதிடுகின்றனர்.

அதேசமயம், மற்றொரு தரப்பினர், “குடும்பம் என்பது ஒரு குழுவாகச் செயல்பட வேண்டியது; ஒருவரின் பங்களிப்பை மற்றவர் மதிக்காமல் போகும்போது மன அழுத்தம் அதிகரித்து குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
<a href=”http://

“>
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, வெறும் சண்டையாகப் பார்க்கப்படாமல், இன்றைய வேகமான உலகில் ஒரு தம்பதியினருக்கு இடையிலான புரிதல் மற்றும் பொறுப்பு பகிர்வு குறித்த மிக முக்கியமான உரையாடலைத் தொடங்கியுள்ளது.