பெங்களூருவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு விநியோகம் செய்ய வந்த ஜொமாட்டோ ஊழியர், தனது இருசக்கர வாகனத்தை சுமார் 600 மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டு, நீண்ட தூரம் நடந்து சென்று டெலிவரி செய்ய நேரிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த ஊழியர் வெளியிட்ட வீடியோவில், அடுக்குமாடி குடியிருப்பு அல்லது குறிப்பிட்ட பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வெயிலில் நீண்ட தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதியை மட்டும் பார்க்காமல், டெலிவரி ஊழியர்களின் சிரமங்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் சாடியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் பலரும் அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arjun Sethi (@odarjunvlog_)

“>

அந்த உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மற்றும் பெரிய குடியிருப்புகள், விநியோக ஊழியர்களுக்கு முறையான வாகன நிறுத்துமிட வசதி அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில், நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் பணிபுரியும் தங்களைப் போன்றவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கூடுதல் மன அழுத்தத்தைத் தருவதாக ஊழியர் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு, தற்போதைய ‘கிிக் எகனாமி’ தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த புதிய உரையாடலைத் தொடங்கியுள்ளது.