பிரபல நடிகை ராஷி கன்னா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த சுவாரசியமான பின்னணியை ராஷி கன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
<a href="http://

“>
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து வரும் ராஷி கன்னா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “பவன் கல்யாண் சாரின் மிகப்பெரிய ரசிகையான நான், ஒரு புகைப்படத்திற்காக அவரைக் கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை; ஆனால் எனது ஆசையை அறிந்தவர் போல அவரே முன்வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘தெலுசு கடா’ படத்திற்குப் பிறகு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ‘ஸ்லோகா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ராஷி கன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.