சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷி கன்னா, தனது முதல் மலையாளப் பட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனது முதல் மலையாளப் படத்தின் போது, அந்த மொழி எளிதானதாக இல்லாததால் நான் மிகவும் பயந்தேன். அதிலும் குறிப்பாக, படத்தில் மோகன்லால் சார் போன்ற ஒரு மேதை இருந்ததால், அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போதெல்லாம் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் எழும்” எனத் தெரிவித்தார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘தெலுசு கடா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது பவன் கல்யாண் நடிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா மற்றொரு நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.