திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், தற்போது கார் பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பெருமை சேர்த்து வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற சொந்தக் குழுவை உருவாக்கி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வரும் இவர், சமீபத்தில் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆப் தி இயர் 2025’ என்ற விருதையும் வென்றுள்ளார். நடிப்பு, வேகம் எனத் தன் வாழ்க்கையை பிஸியாக வைத்திருக்கும் அவர், கிடைக்கும் இடைவெளியில் தன் குடும்பத்தினருடனும் அன்பான நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
அஜித்தின் இந்த ரேஸிங் வாழ்க்கையை மையமாக வைத்து ‘Racing Isn’t Acting’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதனை வீரராகவும், பாசமான குடும்பத் தலைவராகவும் அஜித் பயணிக்கும் இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
