சீனாவில் ஒரு தந்தை தனது ஐந்து வயது மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றபோது ஏற்பட்ட விபரீத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருந்த பணப்பெட்டியைக் கண்ட சிறுமி, விளையாட்டாக அதிலிருந்த நோட்டுகளை எடுத்து கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார்.
மேலும் குறிப்பாக, 500 யுவான் மதிப்புள்ள பல காகித நோட்டுகளில் இருந்த சீனத் தலைவர் மா சேதுங்கின் உருவப்படங்களை மட்டும் மிகத் துல்லியமாக வெட்டி எடுத்துள்ளார். சிறுமியின் தந்தை வீடு திரும்பியபோது, சிதறிக் கிடந்த பணத் துண்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
View this post on Instagram
“>
இந்தச் செயலால் அந்தத் தந்தைக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. கிழிந்த அல்லது சிதைக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகள் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், இது ஒரு ‘முட்டாள்தனத்திற்கான வரி’ என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் கைகளில் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையோ அல்லது பணத்தையோ விட்டுச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஒரு சிறுமியின் அறியாமையால் நடந்த இந்த விளையாட்டுத் தனமான செயல், தற்போது உலக அளவில் செய்தியாக மாறியுள்ளது.
