ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் நடந்துகொண்டதாலும் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர் மற்றும் மண்டபம் பேரூராட்சி ஐ.டி.பிரிவு இணைச் செயலாளர் ஹமீது ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்களான காதர் மொய்தீன் மற்றும் பக்கர் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.