தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து சீமான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களுக்கு யாரெல்லாம் ஓட்டுப் போடமாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ, அவர்களைத் தேடித்தேடி நீக்குவதுதான் இந்த வாக்காளர் சரிபார்ப்புப் பணியின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, நீக்கப்பட்டவர்களில் 40 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் இருக்கலாம் என்ற அதிரடியான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
முன்பெல்லாம் மக்கள் தங்களுக்குப் பிடித்த ஆட்சியாளர்களைத் தேர்வு செய்தார்கள், ஆனால் இப்போது ஆட்சியாளர்களே தங்களுக்குப் பிடித்த வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார். ஜனநாயக முறைப்படி மக்கள் ஓட்டுப் போடுவதைத் தடுத்து, ஆட்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பட்டியலை மாற்றியமைப்பதாக அவர் தனது பேட்டியில் சாடியுள்ளார்.
