மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில், “பிரபு ஸ்ரீ ராமர் ஒரு முஸ்லிம், அவர் இந்து கிடையாது” என்று அவர் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “திரிணாமுல் காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்து மத நம்பிக்கைகளைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
TMC MLA Madan Mitra’s outrageous claim that “Prabhu Sri Ram was a Muslim, not a Hindu” is a deliberate insult to Hindu faith.
This is what the TMC has degenerated into:
👉 Daily attacks on Hindu beliefs
👉 Mocking Hindu faith and traditions of Bengal’s people
👉 Cheap… pic.twitter.com/94Iwum4DPo
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) December 18, 2025
தன் மீதான புகாருக்குப் பதிலளித்துள்ள மதன் மித்ரா, இது 2024-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும், பாஜகவினர் திட்டமிட்டு அதனை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“முழு வீடியோவையும் வெளியிட்டால் நான் அப்படிச் சொல்லவில்லை என்பது தெரியவரும்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட குளறுபடி, வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பாபர் மசூதி மாதிரி தொடர்பான விவகாரங்களால் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் நிலவி வரும் சூழலில், இந்த வீடியோ விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மேலும் அனலைக் கூட்டியுள்ளது.
