ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்தபோது டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷ் டங் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்ச் அவுட்டை கள நடுவர் மறுக்க, இங்கிலாந்து அணி உடனடியாக ‘ரிவ்யூ’ செய்தது. அப்போது ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டிற்கு வெகு தொலைவில் இருக்கும்போதே சத்தம் வருவதாகக் காட்டியது.
வீடியோவிற்கும் ஒலிக்கும் இடையே ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறால், மூன்றாவது நடுவர் வேறு வழியின்றி கேரியை ‘நாட்-அவுட்’ என அறிவித்தார். தனக்கு அவுட் என்று தெரிந்தும் கேரி தொடர்ந்து விளையாடி சதம் அடித்தது இங்கிலாந்து வீரர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தொழில்நுட்பத் தவறுக்கு பொறுப்பான பிபிஜி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது. முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் தங்களுக்கு அவுட் என்று தெரிந்தால் நடுவர் தீர்ப்புக்கு முன்பே வெளியேறிய கண்ணியமான வரலாறுகளை ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
Snicko has admitted an error after a disputed DRS call involving Alex Carey on Day 1 in Adelaide.
Here’s the moment 👇 | #Ashes #AUSvENG pic.twitter.com/OeC0L9fVWs
— Cricbuzz (@cricbuzz) December 17, 2025
“>
ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் ஸ்னிக்கோ அமைப்பு, இங்கிலாந்தில் உள்ள அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்திலிருந்து மாறுபட்டது என்பதும், இத்தகைய குளறுபடிகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இங்கிலாந்து அணி ஐசிசியிடம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால், கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
