தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்ற விஜய் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஈரோடு மக்களுக்கும் மஞ்சளுக்கும் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என விஜய் கூறினார். இந்த நிலையில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு ரசிகர் லைட் கம்பத்தின் மீது ஏறி நின்றார்.
“தம்பி கீழ இறங்குப்பா… ப்ளீஸ்…; நீ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன்”
– ஈரோடு பரப்புரையின்போது லைட் கம்பத்தில் ஏறி நின்ற தொண்டரை இறங்க சொல்லி அறிவுரை சென்ன தவெக தலைவர் விஜய்#Erode | #TVK | #Vijay pic.twitter.com/WjXEjXh0vM
— PttvOnlinenews (@PttvNewsX) December 18, 2025
அவர் அதன் மீது ஏறி நின்ற நடிகர் விஜய்க்கு பிளையிங் கிஸ் கொடுத்த நிலையில் அதனை கவனித்த விஜய் தம்பி கீழ இறங்குப்பா எனக் கூறினார். மேலும் தம்பி நீ கீழ இறங்கினால் தான் நான் முத்தம் கொடுப்பேன் என நடிகர் விஜய் அன்பாக அவரை அகற்றி அதன் பின் கீழே இறங்க வைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
