அமெரிக்காவில் வசிக்கும் கோமல் பாண்டே என்ற இந்தியப் பெண் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் குளிர்காலத்தில் மலிவாகவும், கிராமப்புறங்களில் சில நேரங்களில் இலவசமாகவும் கிடைக்கக்கூடிய ‘பதுவா’ எனப்படும் ஒரு வகை கீரையின் விலை அமெரிக்காவில் எவ்வளவு என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட மிகக் குறைந்த அளவு பதுவா கீரையின் விலை சுமார் 4 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 350 ரூபாய் என்று அவர் கூறியது பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Komal Pandey | Indian Blogger in America 🇺🇸 (@komal_pandey_america)

“>

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளதோடு, பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இந்தியாவில் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு பொருள் வெளிநாட்டில் இவ்வளவு விலையா?” என நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

மேலும் “பதுவா கீரை இப்போது என்.ஆர்.ஐ ஆகிவிட்டது” என்று ஒரு பயனர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதோடு, வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னரே இந்தியப் பொருட்களின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரிகிறது என்றும் பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.