சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் கேலி கிண்டல் செய்வது சகஜம் என்றாலும், இந்த வீடியோவில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல் வரம்பு மீறியதாகப் பார்க்கப்படுகிறது.

திருமணச் சடங்குகளின் போது மணமகனின் நண்பர்கள், மணமகளின் சகோதரிகள் மற்றும் தோழிகள் மீது அதிகப்படியான ‘ஸ்னோ ஸ்ப்ரே’அடித்து விளையாடியுள்ளனர். இதில் முழுமையாக அலங்காரம் செய்து வந்திருந்த பெண்கள், தலை முதல் கால் வரை வெள்ளை நிற நுரை படிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது காண்போரை அதிர வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by irfan (@irfan_reza2.0)

“>

இந்தச் செயலால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தோழிகள், அந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,  பெண்கள் மீது, இவ்வளவு மோசமாக ஸ்ப்ரே அடித்தது விளையாட்டாகத் தெரியவில்லை என்றும், இது அநாகரீகமான செயல் என்றும் சமூக வலைதளப் பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘இர்பான்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பல லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், திருமணக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மற்றவர்களைத் துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.