மெக்சிகோவின் பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள அகாபுல்கோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 10 பேர் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி உணர்ந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த ஒரு மைதானத்தில் அவசரமாகத் தரையிறங்க முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகு, தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.