தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, இஸ்லாமியர்கள் குறித்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்த்தரப்பான திமுக உறுப்பினர்களிடையே கடும் காரசார விவாதமும் பரபரப்பும் நிலவியது.

அவையில் விவாதத்தின் போது, திமுகவினர் முஸ்லிம் தீவிரவாதிகள் எனக் கூறியதாக தவெக உறுப்பினர்கள் முஸ்தபா மற்றும் தாஹிரா  ஆகியோர் ஆவேசமாகப் பேசினர். இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்ததால், அவையில் பெரும் களபரமும் சலசலப்பும் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும், காரசாரமாக விவாதித்தும் வந்ததால் சுமார் 8 நிமிடங்கள் வரை சட்டப்பேரவையில் மிகுந்த உச்சகட்ட பரபரப்பு நிலவியது. பேரவைத் தலைவரின் கட்டுப்பாட்டையும் மீறி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் நீடித்தன.

ஒருபுறம் தவெக – திமுக உறுப்பினர்களிடையே இஸ்லாமியர்கள் தொடர்பான கருத்து குறித்த காரசாரமான விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்த வேளையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி அவையில் பேரவையின் கவனத்தையும் நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்தது