நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முடிவடைந்துவிட்டது. புதுச்சேரியில் இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையர் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 7.66 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளதாகவும் 85,531 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுமார் 10.05 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் இதில் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் ஜனவரி 15ஆம் தேதி வரை தங்கள் பெயரை சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்தில் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடம்பெயர்ந்தவர்கள் எனக்கூறி சுமார் 19.92 லட்சம் பேர், கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி 1.21 லட்சம் பேர் என சுமார் பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கு முன்பாக நடைபெற்ற தீவிரவாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகளின் போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
