உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடந்த ஒரு கல்யாணத்தில் பெரிய சண்டை வந்தது. மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வந்த பிறகு, தாலி கட்டுவதற்கு முன் திடீரென்று ஒரு ‘பிரேஸா கார்’ மற்றும் ₹20 லட்சம் பணம் கேட்டனர். ‘இதை இப்போதே கொடுக்கவில்லை என்றால், கல்யாணம் நடக்காது’ என்று மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் பிடிவாதம் பிடித்தனர். ஏற்கெனவே ₹15 லட்சம் செலவு செய்த மணப்பெண் வீட்டார், இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.
இதனால், கல்யாண மண்டபத்தில் பெரிய களேபரம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. வரதட்சணை கேட்டு அடம்பிடித்ததால், மணமகன் ரிஷப், அவரது அப்பா மற்றும் அவரது அக்கா கணவர் ஆகிய மூவரையும் போலீஸ் கைது செய்தது. ஏமாற்றம் அடைந்த மணப்பெண் வீட்டார் புகார் கொடுக்கவே, திருமண மேடைக்குப் பதிலாக மாப்பிள்ளை சிறைக்குச் சென்றார். வரதட்சணை ஆசை கொண்டவர்கள் மீது போலீஸ் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.
