யூடியூப் தளத்தில் ‘பயணி பரம்வீர்’ என்ற பெயரில் உலகப் பயணங்களை ஆவணப்படுத்தி வரும் பரமவீர் சிங் பெனிவால், இத்தாலியில் லிஃப்ட் கேட்டுப் பயணம் மேற்கொண்டபோது, தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள ட்ரெண்டோவுக்கு செல்ல சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவருக்கு உள்ளூர் ஓட்டுநர் ஒருவர் லிஃப்ட் அளித்துள்ளார். அப்போது, அந்த ஓட்டுநர் தன்னைச் சேர வேண்டிய இடத்தில் விடுவதற்குப் பதிலாகத் தனக்குப் பாலியல் அநுகூலம் கேட்டதாக AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சி விளக்கத்தில் பரமவீர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தன் வாழ்வில் முதல் முறையாக நேர்ந்ததாகவும், உடனடியாக அதை மறுத்து, தன் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து அங்கிருந்து தப்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் காணொளியைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி, கோபம் மற்றும் அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், ‘பாலியல் துன்புறுத்தல் என்பது வேடிக்கையல்ல, இது எவ்வளவு அதிர்ச்சிகரமான அனுபவம் என்பதை என்னால் உணர முடிகிறது’ என்று கருத்துத் தெரிவித்தனர்.
Here is the video https://t.co/yhroO0hz8Q pic.twitter.com/6WdAMWYDuy
— Kaaliyug (@Kaaliyug) December 13, 2025
மேலும், சிலர் இந்தக் காணொளியைக் கிண்டல் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களும் அன்றாட வாழ்வில் பாலியல் தொல்லைகளைச் சந்திப்பதையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளனர்.
