இளைய தலைமுறையினரிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஜிம் பயிற்சி, குடும்ப நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்போர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோனசீமா மாவட்டம், ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில், வகுப்பறை விரிவுரையில் கலந்து கொண்டிருந்த 15 வயது மாணவி நல்லமில்லி சிரி, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் நடந்துள்ளது. வகுப்பறையில் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரிந்து விழுவதை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுசெய்துள்ளது. பலகையில் எழுதிக் கொண்டிருந்த பேராசிரியர் உடனடியாக ஓடி வந்து மாணவியைத் தூக்கினார். அவருடன் மற்ற மாணவர்களும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ఏపీలో గుండెపోటుతో పదవ తరగతి విద్యార్థిని మృతి
క్లాస్ రూములో పాఠాలు వింటూ ఒక్కసారిగా కుప్పకూలిన విద్యార్థిని
కోనసీమ జిల్లా రామచంద్రాపురంలో క్లాస్ రూములో పాఠాలు వింటూ, ఒక్కసారిగా కుప్పకూలిపోయిన సిరి అనే విద్యార్థిని
చికిత్స నిమిత్తం ఆసుపత్రికి తరలించగా, అప్పటికే మృతిచెందినట్లు… pic.twitter.com/dTlA15yxS8
— Telugu Scribe (@TeluguScribe) December 13, 2025
மாணவி நல்லமில்லி சிரியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி, கோனசீமா மாவட்டத்தில் உள்ள பசலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு 15 வயது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதே மாத தொடக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேர்வின்போது, ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
