மும்பையின் விக்ரோலியில் (Vikhroli, Mumbai) பழுது பார்க்கும் பணிக்காக மூடப்பட்டப் பாதசாரி மேம்பாலம் (Foot Over Bridge – FOB) ஒன்றில், பள்ளிச் சீருடை அணிந்தச் சில மாணவிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏறிச் செல்வது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த மேம்பாலத்தின் கீழ் அதிகப் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைச் செல்லும் நிலையில், மாணவிகள் மேம்பாலத்தின் உடைந்த நிலையில் உள்ள வெளிப் பக்கக் கைப்பிடியைப் (Outer Railing) பிடித்துத் தொங்கியபடி இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
View this post on Instagram
மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதைக் காட்டும் உலோகத் தடுப்புகளை (Metal Barricades) மாணவிகள் புறக்கணித்து அதைக் கடந்து செல்கின்றனர். இந்த வீடியோ குறித்துப் பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
“பணியை முடிக்காததால், குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்துப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எப்போது கவனம் செலுத்தும்?” என்றுப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவசரகதியில் பழுது பார்க்கும் பணியை முடிக்காத பிரஹன்மும்பை மாநகராட்சியை (BMC) விமர்சித்துள்ளனர்.
