பாகிஸ்தானிலிருந்துச் செயல்படும் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவைச் (Lashkar-e-Taiba – LeT) சேர்ந்த மற்றும் ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அப்துல் ரவூப் என்ற பயங்கரவாதி, வெளிப்படையாக இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் வன்முறையைப் பரப்பும் நோக்கத்துடன் பேசிய அவர், “காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எங்கள் கொடியை ஏற்றுவோம். கஸ்வா-இ-ஹிந்தில் வெற்றி பெறுவோம். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது” என்று கொக்கரித்துள்ளார்.
🚨🚨🚨 Exclusive OSINT Report:
US designated Lashkar e Taiba terrorist Abdul Rauf spits venom on camera, he says “Who said the Kashmir struggle is over. Whoever says it, their mouth will decay. The Kashmir push will strike harder. I have bigger info. Once Amir Makki Saab (Abdul… pic.twitter.com/KMY2IMMl2w
— OsintTV 📺 (@OsintTV) December 12, 2025
ரவூப் வெளியிட்ட வீடியோவில், “காஷ்மீர் மோதல் முடிந்துவிட்டது என்று யாரும் நம்பக்கூடாது. வரும் நாட்களில் காஷ்மீர் மிகுந்தப் பலத்துடன் தாக்கப்படும். காஷ்மீருக்கானப் போராட்டத்தை நாங்கள் முழுமையடையாமல் விடப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், லஷ்கர் நிறுவனர் அப்துல் ரஹ்மான் மக்கி சாஹிப் ஒருமுறை டெல்லியை வெல்வோம் என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், ரஃபேல் (Rafale) ஜெட் விமானங்கள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றுப் பெருமையடித்துப் பேசியுள்ளார்.
