உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் பகுதியில், திருமணமான மூன்றே நாளில் மணமகள் விவாகரத்துக் கோரியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், டிசம்பர் 1-ஆம் தேதி மணமகளின் தந்தை மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றபோது, மணப்பெண் தனியாக அழைத்து, தனதுக் கணவர் மருத்துவ ரீதியாகத் திருமண உறவுகளுக்குத் தகுதியற்றவர் (ஆண்மைத் தன்மையில் குறைபாடு) என்றுத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்தத் தந்தை, மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லாமல் தனது மகளைத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

இரு குடும்பத்தினரும் சந்தித்தபோது, மணமகன் குடும்பத்தினர் பல விஷயங்களை மறைத்ததாக மணமகள் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இது மணமகனுக்கு இரண்டாவது திருமணம் என்றும், இதேக் காரணத்தைச் சொல்லி முதல் மனைவியும் ஒரு மாதத்திற்குள் பிரிந்து சென்றதாகவும் குற்றம் சாட்டினர்.

இதன் பின்னர், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது, மணமகனுக்கு ஆண்மை இல்லை என்பதும், அவரால் தந்தையாக முடியாது என்பதும் நிரூபணமானது.

கடைசியாக, இரு தரப்பினருக்கும் இடையேச் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மணமகன் குடும்பத்தினர் திருமணச் செலவுக்காகச் செலவழித்த ரூ.7 லட்சம் பணம் மற்றும் அனைத்துப் பரிசுப் பொருட்களையும் மணமகள் குடும்பத்தினர் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.