சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள மண்டல பூஜைத் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் தொடங்குகிறது. டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தரிசனம் செய்ய பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

sabarimalaonline.org என்ற இணையதளம் மூலமாக இந்த முன்பதிவைச் செய்துகொள்ளலாம். டிசம்பர் 26-ஆம் தேதி 30,000 பக்தர்கள் மற்றும் டிசம்பர் 27-ஆம் தேதி 35,000 பக்தர்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பதால், விரைவாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.