தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டவர்களுக்கும் விரைவில் இத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்தே மேலும் 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் தருவதாகத் திமுக அரசு சொல்கிறது,” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் அரசியல் ஆதாயத்திற்காகவே செய்யப்படுவதாக இபிஎஸ் தனது உரையில் குறிப்பிட்டார்.