புதுச்சேரி அரசு, வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்பில் ₹750 மதிப்புள்ள பொருட்கள் அடங்கியுள்ளன. அதில், 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், மற்றும் 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தப் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
அதே சமயம், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் உள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு ரொக்கப் பணத்துடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுமா அல்லது பரிசுப் பொருட்கள் மட்டும்தானா என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடையே நிலவுகிறது.
