தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மாற்று கட்சிக் கூட்டமாக இருந்தாலும் எந்த சமரசமும் பாதுகாப்பில் காட்டாமல் முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் வழங்கிய புதுச்சேரி அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார்.
அதன் பிறகு மாற்று கட்சிக் கூட்டங்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வரை பார்த்து தமிழகம் முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியை கண்டு கொள்ளவில்லை என்ற அவர் 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் இதுவரை மாநில அரசு வழங்காததோடு போதிய நிதியும் மத்திய அரசு வழங்காததால் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடை கூட இல்லாத மாநிலமாக இருக்கிறது.
திமுகவை மட்டும் நம்பாதீங்க. கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பறக்கும் என்று கூறினார். இந்த கூட்டத்தின் போது புதுச்சேரி முதல்வர் மற்றும் விஜய்யை இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஏற்கனவே கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே புதுச்சேரி முதல்வருடன் நடிகர் விஜய் நட்பு பாராட்டி வருகிறார். மேலும் இதன் காரணமாக வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
