நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, நடிகர் திலீப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8) விடுவித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் திலீப், “என்னுடைய திரை வாழ்வை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று முயற்சி நடைபெற்றது.

இவ்வளவு காலம் எனக்காகப் பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று உருக்கத்துடன் கூறினார். இந்த வழக்கு சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடிகர் திலீப்பின் விடுதலைத் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.