முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை.

இது தொடர்பான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுடன் தனக்குத் தொடர்பு இல்லை என்றும், அவர் தன்னிடமும் பேசவில்லை, தான் அவரிடமும் பேசவில்லை என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.