சமூக ஊடகங்களில் பல ஆச்சரியமூட்டும் காட்சிகள் அடிக்கடி வைரலாவதுண்டு. அப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் நடந்த ஒரு காட்சி அனைவரின் மனதையும் தொட்டுச் சென்றுள்ளது.

அதிகாலை 4 மணி அளவில், ஒரு பக்தர் மிகுந்த ஆத்மார்த்தத்துடன் “ராதா” என்னும் நாமத்தை உரத்த குரலில் அழைக்கும் காட்சி அங்கிருந்தவர்களுக்கு மெய்சிலிர்க்க வைத்தது. அமைதியான பிருந்தாவனத்தின் அதிகாலைத் தெருக்களில் ஒலித்த அந்தக் குரல், அந்தச் சூழ்நிலையையே மேலும் ஆன்மீகமாக்கியது. காலையில் இந்த அற்புதக் காட்சியைப் பார்ப்பவர்கள் மிகுந்த மன அமைதியையும், ஆழ்ந்த பக்தியையும் உணர்வார்கள் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Ka Tadka (@viral_ka_tadka)

“>

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த நபர் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் ராதையின் நாமத்தை உச்சரிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. அவரது குரலின் தீவிரமும், ஆழமான பக்தியும் பிருந்தாவன வாசிகளை மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள கிருஷ்ண பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இது ஏதோ ஒரு பிருந்தாவனத்தில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன்கள், இது தங்கள் இதயத்தில் உள்ள நம்பிக்கையையும் பக்தியையும் மேலும் ஆழப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பக்தியும் நம்பிக்கையும் கால எல்லைகளைக் கடந்து நிற்கும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.