ஜெர்மனியில் அதிகச் சம்பளம் கொண்ட ஒரு தொழில்நுட்ப வேலையை உதறிவிட்டு, தனது ஆர்வத்தையும் மாவுப் பிழிதலையும் நம்பி ஒரு புதிய தொழில் பாதையைத் தேர்ந்தெடுத்த ஒரு இந்தியரின் கனவுப் பயணம் பலரின் மனதை வென்றுள்ளது. டோசாம்மா உணவகத்தின் இணை நிறுவனர் ஆன மோகன், தனது லாபகரமான வேலையை விட்டுவிட்டு ஒரு தோசை உணவகத்தைத் தொடங்கியது குறித்த தனது கதையைச் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டார்.
View this post on Instagram
மோகன் தன் பதிவில், “ஜெர்மனியில் ஒரு பெரிய சம்பள வேலையை விட்டுவிட்டு, தோசை உணவகத்தைத் தொடங்கி, சவால்களைச் சந்தித்து, பாரீஸில் இருந்து லண்டன் வரை, இப்போது புனே வரை எங்கள் கிளையை விரிவுபடுத்தி, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆரோக்கியமான, பசையம் இல்லாத தோசைகளைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்” என்று விளக்கியுள்ளார்.
அவர் இந்த உணவகத்தை 2023 இல் இணைந்து நிறுவினார், மேலும் தற்போது அதன் நிர்வாக இயக்குநராக உள்ளார். “நான் என் அதிக சம்பள வேலையை விட்டுவிட்டு இதைச் செய்கிறேன்” என்று மோகன் ஒரு விடியோவில் தோசை சுடும்போது கூறுகிறார். அவர் கல்வி உதவித்தொகை மூலம் பாரீஸில் படித்ததாகவும், அதன்பின்னர் அதிக சம்பளம் கொண்ட வேலைகளைப் பெற்றதாகவும் கூறுகிறார்.
இருப்பினும், விரைவில் அதிலிருந்து விலகி நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தோசை உணவகத்தைத் தொடங்கினார். இந்தத் தொழில் மாற்றம் கேட்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தாலும், நடைமுறையில் இந்த மாற்றம் மிகவும் சிரமமாக இருந்ததாக அவர் விவரிக்கிறார். “அது மிகவும் சோர்வாக இருந்தது, தூக்கமில்லாத இரவுகள், செயல்பாட்டு ரீதியான தலைவலிகள்” என அவர் தான் சந்தித்த தடைகளை விவரிக்கிறார்.
தற்போது, மோகனின் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகள் இருப்பதாகவும், சமீபத்திய கிளை இந்தியாவில், புனேயில் (FC ரோடு) திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவரது இந்த முயற்சிக்கு “இந்த இளைஞனின் சிந்தனை செயல்முறையைக் கண்டு வியப்படைகிறேன்! இந்தியாவின் ஆரோக்கியமான உணவை உலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு மிகப்பெரிய மரியாதை!” எனப் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
