ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிக அதிகமான பால்விகித ஏற்றத்தாழ்வு (Gender Imbalance) உள்ள நாடாக லட்வியா (Latvia) உள்ளது. இங்கு ஆண்களைவிட 15.5% அதிகமான பெண்கள் இருப்பதால், ஆண்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால், அன்றாட வீட்டு வேலைகள் மற்றும் பழுது நீக்கும் பணிகளைச் செய்ய ஆண் துணையில்லாத பல லட்வியப் பெண்கள், ‘ஒரு மணி நேரத்திற்கான கணவன்’ (Husbands for an hour) என்ற பெயரில் கைவினைஞர்களை (Handymen) வாடகைக்கு அமர்த்தும் புதியப் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர்.

லட்வியாவில் உள்ள Komanda24, Remontdarbi.lv போன்ற நிறுவனங்கள், பெண்கள் ஆன்லைனில் அல்லது போன் மூலம்ப் பதிவு செய்து ஒரு மணி நேரத்திற்குள் வீட்டுக்கு ஆட்களை வரவழைத்துக் பிளம்பிங், தச்ச வேலை, பெயிண்டிங் போன்றச் சிறு பழுது பார்க்கும் வேலைகளைச் செய்து கொள்கின்றனர்.

லட்வியாவில் ஆண்கள் அதிகம் புகைபிடித்தல், அதிக உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டிருப்பதாலேயே இந்தப் பால்விகித ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். லட்வியப் பெண்கள் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது.